கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே உங்கள் அனைவரையும் புதிய ஆண்டில் சந்திப்பதில் பெருமகிழச்சி அடைகின்றேன். புதிய ஆண்டை காண செய்த ஆண்டவர் தாமே உங்களை புதிய நன்மைகளினாலும் கிருபைகளினாலும் முடிசூட்டுவாராக.
புதிய ஆண்டு என்றதுமே நம் நினைவுக்கு வருவது நாம் எடுக்கும் தீர்மானங்கள் தான். தீர்மானம் நம்மை ஆண்டவர் பார்வையில் அவரின் சிறந்த பிள்ளைகளாக உலக பார்வையில் சிறந்த மனிதர்களாக நம்மை தன்னால் தானே செதுக்க உதவுகின்றன. அந்த வகையில் தீர்மானம் எடுப்பது ஆகசிறந்தது. ஆனால் எடுத்த தீர்மானங்களை காபாற்றுவது பின்பற்றுவது என்பது மிகவும் கடினமான ஒரு காரியம்.
இதற்கு ஆதாரமாக இங்கிலாந்து தேசத்தை சேர்ந்த லாளலி, தன்னுடைய ஆய்வு அறிக்கையில் சொல்வது என்னவென்றால் எந்தவொரு தீர்மானத்தையும் ஒருவர் தன்னுடைய பழக்கமாக மாற்றுவதற்கு குறைந்தபட்சம் 18 நாட்கள் ஆகும் என்கின்றார். ஆனால் அதே ஆய்வறிக்கையில் அவர் குறிப்பிடுவது 33% சதவீத மக்கள் ஒரு மாதத்திற்குள்ளக தாங்கள் எடுக்கும் தீர்மானத்தில் தோற்றுவிடுகின்றனர். அதின்நிமித்தம் வழி தவறுகின்றனர், பழைய வழிக்கு செல்கின்றனர், தீர்மானத்தை விடுகின்றனர், தடுமாறி போகின்றனர்.1
எனதருமை பிள்ளைகளே உலகத்தார் தீர்மானததில் இருந்து வழிதவறலாம் ஆனால் கிறிஸ்துவின் பிள்ளைகள் அப்படி செய்யலாகாது. ஆண்டவர் பின்பாக போக துணிந்த நீங்கள் மீண்டும் தடுமாறி பழைய பாவ வழிகளுக்கு செல்லலாகாது. ஒருவேளை இந்த ஆண்டில் நீங்கள் ஆண்டவற்கு பின்பாக செல்ல முடிவுஎடுத்து இந்த 18 நாட்களக்குள் தவறி இருப்பீர்கள் என்றால் உலகத்தார் போன்று தடுமாறி போகதிருங்கள்.
வேதம் சொல்கின்றது நீதி 24:16ல் நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்; துன்மார்க்கரோ தீங்கிலே இடறுண்டு கிடப்பார்கள். நீங்கள் விழுந்தலாம், தடுமாறினாலும், தோற்றாலும், நீங்கள் நீதிமானாக ஆண்டவரின் பிள்ளையாக இருக்க அழைக்கப்பட்டவர்கள். நீங்கள் இந்த 18 நாட்களுக்குள்ளாக எவ்வளவு முறை தடுமாறி இருந்தாலும் நீங்கள் மீண்டும் எழுந்திருக்க அழைக்கபட்டவர்கள். தீர்மானததை காத்துக்கொள்ளுங்கள், போராட்டத்தை போராடுங்கள், நிச்சயமாக இந்த வருட முடிவில் மாற்றதை காண்பீர்கள், அவரின் பிள்ளைகளாக நீதியின் சூரியன் உங்கள் மேல் உதிப்பதை காண்பீர்கள்.
1 https://onlinelibrary.wiley.com/doi/abs/10.1002/ejsp.674 (accessed on Jan 14, 2020)